எழுத்துரு அளவு    

கோவில் திருப்பணி
திருப்பணி

ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணர் கிருபை

11/03/2014

கண்ணனின் ஆலயம் மிகவும் பழுதடைந்துள்ளது. 25 வருடங்களாக எடுத்து செய்வாரில்லை. தற்பொழுது கண்ணனின் திருப்பணி வேலைகள் (1.25 கோடி) பெரும் பொருட்செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களால் தங்களால் இயன்ற உதவியை பொருளாகவோ பணமாகவோ செலுத்தி ரதீது பெற்றுக் கொள்ளவும். (தொடர்புக்கு: ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கைங்கர்ய டிரஸ்ட்) கண்ணனின் அனுக்கிரத்திற்கு பாத்திரமாகும்படி வேண்டுகிறோம்.திருப்பணி தொடர்பாக கைங்கர்ய டிரஸ்ட் தவிர வேறு யாரையும் தொடர்புகொள்ள வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.


கிருஷ்ண பக்தர்களுக்கு என்னுடைய நமஸ்காரம். இந்த இனணயதளத்தின் மூலமாகவும் மற்றும் பல்வேறு முயற்சியின் மூலமாகவும் ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் ஆலய திருப்பணிக்கு நிறைய உதவி எங்களுக்கு கிடைத்துள்ளது. அதனால் கிருஷ்ண ஆலய திருப்பணி 65% நிறைவு பெற்றுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆலய திருப்பணி தற்சமயம் பண பற்றாகுறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ண பக்தர்கள் தங்களால் இயன்றதை மீண்டும் ஒரு முறை திருப்பணிக்கு தந்து உதவினால் மீதியுள்ள வேலைகளை செவ்வனே செய்து முடித்து கோலாகலமாக அணைத்து கிருஷ்ண பக்தர்களின் படைசூழ மஹாசம்ப்ரொக்ஷனை (கும்பாபிஷேகம்) நடைபெறும்.



மீதியுள்ள வேளைகள்:
  1. நாலு மண்டப Flooring (Granite, Marble) - 10 லட்சம்
  2. நாலு மண்டப Weathering proof -10 லட்சம்
  3. கிருஷ்ணன் கிடைத்த காளிங்க நர்த்தன மடு என்ற சிறு குளத்தின் அருகில் நந்தவனம் அமைத்தல்.
  4. பிரதான சாலையில் இருந்து ஆலயத்திற்கு வரும் இடத்தில் நுழைவாயில் (Arch) அமைத்தல்.
  5. கிருஷ்ணஜெயந்தி போன்ற விசேஷ நாள்களில் பயன்படுத்த கழிப்பிட வசதி, போன்ற திருப்பணி மீதி இருகின்றது.


நான் இந்த இனணயதளத்தில் அதிசயங்கலென்ற தலைப்பில் பக்தர்களுக்கு கிடைத்திருக்கின்ற அனுக்ரஹத்தில் சில விஷயங்கள் மட்டும் கூறியிருக்கின்றேன். ஆலய திருப்பணி வேலையில் நான் ஈடுபட்டு இருப்பதால் நிறைய விஷயங்களை வரும் காலங்களில் தெரிவிக்கிறேன். மீதம் உள்ள ஆலய திருப்பணி முடிந்து மஹாசம்ப்ரொக்ஷனம் நடை பெற்ற பிறகு இந்த ஆலய திருப்பணி வசூல் பொறுப்பே முழுமையாக தலைமை ஏற்று நடத்தும் திரு. ஆலய தலைமை அர்ச்சகரும் என் மதிப்பு கூறிய தந்தையுமான திரு. ஜெயராம பட்டசார்யர் அவர்களுக்கு இந்த சம்ப்ரோக்ஷனையில் என்ன சோதனைகள் வந்தது, அதை எப்படி கண்ணன் தீர்த்து அனுக்ரஹம் செய்தான் என்பதே விவரமாக கூறுகின்றேன். இந்த சோதனைகள் அனைத்தும் சாதாரண நிகழுவாக இருக்காது. (சிற்சில அரசியல் விஷயங்களை தவிர மற்றதை விரிவாக கூறுகின்றேன்) காத்திருங்கள்.

குறிப்பு: இந்த இனணயதளத்தில் பார்த்த பக்தர்கள் facebook லும் ஊத்துக்காடு ஆலயத்தை பற்றி எழுதினால் வசதியாக இருக்கும் என்று கேட்டு கொண்டதிற்கு இனங்க தற்சமயம் facebook லும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஆலய அதிசயங்கள் மற்றும் திருப்பணி முன்னேற்றங்கள் சிற்சில தெய்வ விஷயங்கள் ஆகியவை அதில் தொடர்ந்து எழுதுவதாக இருக்கின்றேன். நான் கூறும் விஷயங்களை என் முன்னிலையில் எழுதிக்கொண்டு பிறகு இந்த இனணயதளத்தில் வெளியிட்டு கொண்டிருக்கின்றார் ஒரு பக்தை. இது எனக்கு கிடைத்த கைங்கர்யம் என்று கருதி என் சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று கேட்டுகொண்டதால் வெளியிடவில்லை. அந்த பக்தையின் துணை கொண்டு இந்த facebook லும் தொடர்ந்து தகவல்கள் மேம்படுத்தப்படும்.


திருப்பணி பற்றிய புகைப்பட காட்சிகள் மேலும் பார்க்க




                             

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், 2013ல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டவை.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

https://AcadooGhostwriter.com