ஊத்துக்காடு கோயில்
ஊத்துக்காடு ஸ்தலபுராணம்
அன்பர்களே! நீங்கள் அதிகம் அறிந்திடாத கிருஷ்ண சரித்திரத்தையும் ஒரு இடத்தை தனது நிரந்தர வசிக்கும் இடமாக மாற்றிக் கொண்ட சரித்திரத்தையும் ஆயிரம் வருடங்களாக தன்னை தேடி நாடி வரும் பக்தர்களிடம் அவர்கள் குறைகளைக் கேட்டு சற்றே அவர்களுடன் விளையாண்டு பின்பு அவர்கள் தங்களிடம் கூறிய குறைகள் மற்றும் அல்லாத அவர்கள் வாழ்வில் அத்தனையும் போக்கி, இப்பிறவி முழுவதும் சுகமாக வாழ வைத்து தன்னிடமே அழைத்து கொள்ளும் கிருஷ்ணனின் சரித்திரத்தையும் சற்றே விரிவாக உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த கிருஷ்ணனையும், இந்த ஷேத்திரத்தையும் பற்றி 12 ஆழ்வார்களும், தன்னுடைய பாசுரங்களில் குறிப்பிடவில்லை. 12 ஆழ்வார்களும் தாங்கள் இயற்றிய பாசுரங்களில் குறிப்பிடவில்லையே என்ற வருத்தத்தை ஒருவர் அவதரித்து தான் இயற்றிய பாடல்கள் மூலமாக தீர்த்து வைத்தார் என்பது அந்த பாடல்களை கேட்கும் பொழுது, கேட்பவர் அறியாமலையே அவர்கள் மனது கிருஷ்ணனின் பக்கம் செல்வதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். தன்னுடைய பிஞ்சு பதங்களால் இந்த ஸ்தலத்தில் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றான்.
மேலும் படிக்க...