Oothukkadu Kalinganarthana Perumal Temple
Parihara Sthalam
கோலோகதில நித்திய வாஸம் செய்கிற பராமாத்மா பாரத தேசம் முழுவதும் ஆங்காங்கே ஆலயம் கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களின் துன்பங்களை நீக்குகிறான். அப்படி நீக்குவதற்கு காரணம் மீண்டும் மீண்டும் உலகங்களை ஆசை படுவதற்கு இல்லை உலகங்கள் தற்காலிகமானவை. கிருஷ்னனே சாஸ்வதம் எனக்கு உன்னிடம் இருந்து எதுவும் வேண்டாம் நீதான் வேண்டும் என்று என்னி கேட்கவைப்பதே அவன் லட்சியம். அதை முதலில் கொடுக்கிறான் என்றால் யாரும் பகவானிடம் வரமாட்டார்கள், அப்படி வராமல் போய்விட்டாலும் க்ருஷ்ணனுக்கு ஒன்னும் நஷ்டம் இல்லை. நமக்கு தான் பெரும் நஷ்டம்.
இந்த ஊத்துக்காடு சன்னதி சில துன்பங்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது
1) கிருஷ்ணபக்தி வேண்டும், ஞானம் வேண்டும் என்று ஆசை பட்டு சாதனை செய்துக் கொண்டு இருப்பவர்கள் இந்த சன்னதியில் 3 நாட்கள் தொடர்ந்து செய்து தங்களுடைய சாதனையை இந்த சன்னதியில் செய்துவர நம்முள் இருக்கும் தடைகள் நீங்கி நமக்கான வழி பிறக்கும்.
2) ரோஹினி நஷ்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம்.
3) புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் இந்த சன்னதிக்கு வந்து கோவில் பாரம்பரிய முறைப்படி வழிபட சந்தானபாக்கியம் கிட்டுவது நிச்சயம்.
4) விவாக தடை நீக்கம்
5) ராகு கேது சர்பதோஷம் நீங்கும்
6) கலைத்துறையி இருப்பவர்கள் வழிபட வேண்டிய ஒரே கிருஷ்ண ஷேத்திரம் சங்கீதம் - பரதம் - சினிமா நாடகம் வீனை, புல்லாங்குழல் போன்ற சங்கீத உபகரணங்களை வாசிப்பவர்கள் போன்றோர்கள் வழிபட வேண்டிய ஷேத்திரம். அவர்கள் இங்கு அரங்ககேற்றம் செய்வது மிகசிறப்பு)
7) இந்த சன்னதியில் அன்னப்ராசனம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த கோவில் ஸம்ரதாயம் என்னவென்று தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுவிட்டு வரவும்)
*குறிப்பு: இது கிராமம் அதனால் கிருஷ்ணனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நிவேத்திய பொருட்களான வெண்ணை, அவல், சக்கரை, பழவகைகள் நீங்கள் வரும் வழியில் வாங்கி வரவும். கர்பக்ரஹத்தில் கிருஷ்ணரை சேர்த்து 6 மூர்த்திகள் இருக்கா, ஒன்னறை அடி மாலை 6 அல்லது 3 வாங்கி வரவும். கிருஷ்ணனுக்கு மட்டும் இரண்டு குஞ்சம் வைத்து வாங்கவும். உதிரி பூ மற்றும் துளசி தனியாக வாங்கிவரவும்.




