எழுத்துரு அளவு    

ஊத்துக்காடு கோவில் விபரங்கள்
விபரங்கள்

ஊரின் பெயர்: ஊத்துக்காடு (ஊற்றுக்காடு)

அமைந்துள்ள இடம்: கும்பகோணத்திலிருந்து சுமார் 11 கி மீ. வெட்டாற்றின் வடகரையில் அமைந்து உள்ளது.

செல்லும் வழி: கும்பகோணதிலிருந்து பட்டீச்சரம், ஆவூர் வழியாக ஊத்துக்காடு செல்லலாம்.

மூலவர்: ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ வேதநாராயண பெருமாள்.

உற்சவர்: ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ காளிங்க நர்த்தனப்பெருமாள்.

ஊரின் வேறு பெயர்கள்: தேனுஸ்வாசபுரம், தென்கோகுலம், முச்சுக்காடு (மருவி) ஊத்துக்காடு

வேறு சந்நிதிகள் : நர்த்தன விநாயகர், பிரகாரத்தில் பஞ்சமுக ஹனுமான், ஊத்துக்காடு வேங்கடகவி, ஆண்டாள், வரதராஜர்

தியானம்







ஓங்கார சித்ரயுத காளிங்க நர்த்தன

மஹாரங்க ஜால வேஷ

கல்லலோல பீகர வதூ சங்கதோஷ,

ஹ்ருத கம்பீர கோப வேஷ,

நீலாம்பரி சரண ராதீச சாங்கமுக

பாலி சகோர வேஷ

ஸ்ரீ தேனுஸ்வாஸபுர

தேவாதி தேவ நமோ நமஸ்தே.

இடம்

ஊத்துக்காடு கிராமம் கும்பகோணத்தில் இருந்து 11 கி மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணம், பட்டீஸ்வரம் வழியாக கோவிந்தகுடி, ஆவூர் வழியாக ஊத்துக்காடு வரலாம். திருக்கருக்காவூர் ஆவூர் இடையே உள்ளது இக்கிராமம் . தஞ்சாவூரில் இருந்து திட்டை, மெலட்டூர், திருக்கருகாவூர் வழியாக இவ்வூர் வரலாம். மெயின் ரோட்டில் அறிவிப்பு பலகை இருக்கும். நேரே வந்தால் கோவில் சன்னதியை அடையலாம்.

சின்னஞ்சிறு கோவில் தான். ஆனால் அழகாக இருக்கிறது. கோபுரம் ஆதிசேஷனுடன் தொடர்புடையதாக சொல்கிறார்கள்.

மூலவர் வேத நாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார். தனிச்சன்னதியில் மகாலக்ஷ்மி தாயார் வீற்றிருகிறார். கோபுர வாசலில் நடனம் செய்யும் விநாயக பெருமான் குதூஹலமாகக் குதித்தாடுகிறார். கோவில் சுத்தமாக புதுப் பொலிவுடன் காணப்படுகிறது. தற்போது ஆலய திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது.

சிறப்புகள்

கோவிலின் பழமை ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இத்திருக்கோவிலில் வேத நாராயண பெருமாள் பிரதான மூர்த்தியாக எழுந்தருளி பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவில் மிகச் சிறியதாக இருந்தது. பின்பு கண்ணன் வந்த பிறகு நலம் கொண்ட சோழனால் கோவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று கோவில் விஸ்தாரமாக்கப்பட்டது. ஆக இந்த சந்நிதியை விரிவாக்கிய பெருமை நலம் கொண்ட சோழனையே சாரும்.

விக்கிரக அழகு ஊத்துக்காடு கோவிலில் காளிங்கனின் சிரத்தின் மீது இடது காலை ஊன்றி, வலது கையில் அபயஹஸ்தத்துடன் தரிசனம் கொடுக்கும் கண்ணனின் திருவுருவத்தைக் காணப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். மொழுமொழுவென்ற கால்களும் பளபளவென்ற கன்னங்களும், கையை நீட்டியிருக்கும் லாவகமும், தூக்கிக் கட்டிய கொண்டையும், சுருண்டு சுருண்டு நெற்றி வரைத் தொங்கும் மோதிரச் சுருட்டையான கேசமும், பாதங்களின் பிஞ்சு விரல்களும் மாயப் புன்னகையுமான நர்த்தனமாடுகிற கண்ணனின் வடிவத்தைப் பார்த்தவுடன் சிற்பியால் செய்யப்படாத விக்கிரகம் என்றே தெரிகின்றது.

திருப்பணி

25 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஸ்ரீ காளிங்க நர்த்தன பெருமாள் கோவில் சீரமைப்பு பணி 1.5 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பணி ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கைங்கர்ய டிரஸ்ட் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க...

தொடர்புக்கு
ஜெயராம் பட்டாச்சார்,
கோவில் அர்ச்சகர்
2/210 ஸ்ரீ கிருஷ்ணா விலாசம், அக்ரஹாரம்
ஊத்துக்காடு. ஆவூர் (வழி)-612701
கைபேசி: +91 - 9442699355
மின்னஞ்சல்: oothukkadu@gmail.com

இந்த வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவது / வலைத்தளத்தின் போலிகள் கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்கள், 2013ல் புதுப்பிக்கும் பணிகள் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்டவை.
கோவில் வளாகத்திற்குள் புகைப்படம்/வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

https://AcadooGhostwriter.com e="FlashVars" />